Home பிரதான செய்திகள்தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த மரடோனா

தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த மரடோனா

by admin

நடுவருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதனையடுத்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். உலக கிண்ண  கால்பந்து தொடரில், இங்கிலாந்து மற்றும் கொலம்பியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வென்று கால்இறுதிக்கு முன்னேறியிருந்தது.

இந்த போட்டியில் நடுவர் ஜிஜெர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார் எனவும் அவரது சில முடிவுகள் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தன எனவும் கொலம்பிய அணித்தலைவர் தெரிவித்திருந்தார்.  அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆர்ஜென்ரீனா கால்பந்து ஜாம்பவான் மரடோனா இங்கிலாந்து நினைவுகூரத்தக்க ஒரு வழிப்பறியை செய்து விட்டது என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் மரடோனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடுவருக்கு எதிரான அவரது கருத்து முற்றிலும் நியாயமற்றது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தனது கருத்துக்கு மரடோனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More