ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் நேற்றையதினம் கடத்தி செல்லப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தினைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரான ஜாவித் அகமது என்பவரை நேற்றிரவு அவரது வீட்டில் இருந்து தீவிரவாதிகள் கடத்திச் சென்ளுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இவர் சடமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது
Spread the love
Add Comment