Home இந்தியாடெல்லியில் துணை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் முரண்பாடு தொடர்கிறது :

டெல்லியில் துணை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் முரண்பாடு தொடர்கிறது :

by admin

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆளுநர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.

டெல்லியில் ஆட்சி அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் எனவும், அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

நிலம், சட்டம் ஒழுங்கு துறைகள் தவிர ஏனைய துறைகளின் செயல்திட்டங்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதனால் டெல்லி ஆம் ஆத்மி அரசு ஆளுநர் தடைவிதித்த திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.

இந்தநிலையில் , முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று துணை நிலை ஆளுநர் அஜய் பைஜ்வாலை சந்தித்து பேசிய பின் . செய்தியாளர்களை சந்தித்த போது ;, துணை நிலை ஆளுநர் உச் நீதிமன்றின் தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

ஆனால், ஆளுநரின் கையில் அதிகாரம் இருப்பதாக 2015-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி, உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பெயரிலேயே தான் செயல்பட முடியும் என அஜய் பைஜ்வால் கூறியதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More