ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் சிறையில் உள்ள பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula Da Silva) வை, சிறையிலிருந்து விடுவிப்பதற்கு நீதிபதியொருவர் எடுத்த முயற்சியை, அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர் தடுத்துள்ளார்.
அந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அத்தேர்தலில் போட்டியிட்டால் லூயிஸ் வெற்றிபெறுவார் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக லூயிசுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதியரசர் ஒருவர் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
ஏனினும் அந்த தீர்ப்பினை தடுத்த அந்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் லூயிஸ் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது