164
ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை என்று அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார். பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தபோதும் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் நடிப்பால் கவனத்தை ஈர்த்திருந்தார்.
அருண் விஜய் மூத்த நடிகர் விஜய்குமாரின் மகன் என்ற வாரிசு அடையாளத்துடன் அறிமுகம் ஆனாலும் தனது கடின உழைப்பால் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின்னர் ஏன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
என்னை அறிந்தால் படத்தின் பின்னர் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலர் என்னை வில்லனாக நடிக்கவைக்க அணுகியதாகவும் கூடுதலான சம்பளம் தருவதாகவும் சொன்னதாகவும் அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
எந்தப் பாத்திரமும் ‘என்னை அறிந்தால்’ விக்டர் கதாபாத்திரத்தின் அளவுக்குக் கனமாக இல்லை என்பதால் மறுத்துவிட்டதாகவும் கூறிய அவர் பணத்துக்காகச் சொதப்பலானபாத்திரங்களில் நடித்து ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளர் அருண்.
Spread the love