ஓரேபார்வையில் மன்னார் செய்திகள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கல்வி சமூகம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்வுகளிலே முதலில் போராட்ட காலத்திலே கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தமது கடமையின் நிமித்தம் சென்று உயிர் நீத்த எமது ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்பே இவ்வாறான நிகழ்வுகளை ஆரம்பிப்பது சாலச் சிறந்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மடு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (14) மாலை கருங்கண்டல் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் ம.வி பாடசாலையில்,மடு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
ஆசிரியர் சமூகம் என்பது ஒரு தியாகத்தை கொண்டிருக்கின்ற சமூகம்.அவர்களுடைய வாழ்க்கை என்பது பணிக்கப்பட்ட ஒவ்வரு பாடசாலைகளிலும் தமது பிரச்சினைகளை ஒரு பக்கம் வைத்து விட்டு தக்களிடம் ஒப்படைக்கப்பட்ட,தமது பிள்ளைகளாக கருதப்படுகின்ற அந்த செல்வங்களை சாதனை படைக்கின்ற அளவிற்கு கொண்டு வருகின்ற செயலைச் செய்வதுதான் எங்களுடைய ஆசிரியர் சமூகம்.
போராட்ட கலாத்திலே இந்த கல்விக்காக, கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தனது கடமையின் நிமித்தம் சென்ற போது உயிர் நீத்த ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்தி இப்படியான நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இன்றைக்கு கல்வி என்பது தான் எங்களுடைய தேசத்திலே நிமிர்ந்து நிற்கின்ற ஒரு விடையமாக இருக்கின்றது.
உயிர்களை இழந்தோம்,உடமைகளை இழந்தோம்,எல்லாவற்றையும் இழந்தோம்.ஆனால் கல்வி ஒன்று தான் மிஞ்சியுள்ளது.இந்த பாடசாலை நகர்ந்து நகர்ந்து மரங்களுக்கு கீழும்,பாரிய வெப்பத்தின் மத்தியிலும் தொடர்ச்சியாக பாடசாலை நகர்ந்து சென்று தனது கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது என்று சொன்னால் அது எமது ஆசிரியர்களின் சேவை என்றே கூற முடியும்.அந்த வகையிலே மாணவச் செல்வங்கள் நீங்கள் ஆசிரியர்களுக்கும்,பெற்றோருக்கும் , பாடசாலைக்கும் பெறுமை சேர்க்க வேண்டும்.
இன்றைக்கு நீங்கள் செய்த சாதனை ஆசிரியர் சமூகத்திற்கும், உங்களுடைய பெற்றோர்களும் மகிழ்கின்ற அறிய சாதனையை நீங்கள் நிகழ்த்தியுள்ளீர்கள். எமது பெற்றோர்கள் எங்களுக்காக உழைக்கின்றனர்.தங்களை உருக்கின்றார்கள்.கஸ்டம் துன்பங்கள் எல்லாம் என்னோடு போய் விடட்டும்.என் பிள்ளைகளை தொடரக்கூடாது என்ற நிலையில் எமது பெற்றோர் செயற்படுகின்றனர். ஆகவே அவர்களை கடைசி நேரம் விரைக்கும் நாங்கள் பார்க்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. அதே போல் அவர்கள் நினைக்கின்ற,கஸ்டப்படுகின்ற எனது பிள்ளை எதிர்காலத்தில் கஸ்டப்படக்கூடாது என நினைக்கின்ற தன்மையை நீங்கள் கல்வியின் ஊடாக உண்டு பண்ணி உங்களுடைய சொந்தக்காலிலே நிற்பதற்கான வழிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது பெற்றோர்களின் எதிர் பார்ப்பு
இன்றைய காலகட்டத்தில் சிலர் தமது சொந்தக்காலிலே,வசதியாக இருக்கின்ற போது தமது பெற்றோர்களின் அருமையை புறிந்து கொள்ளுவதில்லை.எனினும் எமது பிரதேசங்களில் அவ்வாறான நிலை இல்லை. நகர் புறங்களிலே அப்பா, அம்மாவை கொண்டு சென்று இல்லங்களிலே சேர்த்து விடுகின்றனர். அவர்கள் அங்கே பல்வேறு மன அலுத்தங்களுக்கு மத்தியிலே தமது இறுதி வாழ்நாள் வரை அங்கே இருக்கின்றார்கள் எனது பிள்ளை என்னை கை விட்டு விட்டதே,எனது பேரப்பிள்ளை என்னை கை விட்டு விட்டதே என அவர்கள் நினைக்கின்ற போது அவர்களின் சாபம் எங்களை நல்ல நிலையில் வாழ விடாது.எனவே ஆசிரியர் சமூகம் என்றைக்கும் இறைவனால் ஆசிர் வதிக்கப்பட்டுள்ள ஒரு சமூகம்.எனவே அவர்களின் சந்ததிகளான மாணவச் செல்வங்களாகிய நீங்களும் ஆசிர் வதிக்கப்பட்டவர்கலே.உங்களின் எதிர்காலம் சிறப்பிக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு.
மடு வலயக்கல்வி மேம்பாட்டு அமையத்தின் அனுசரணையில்,மடு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் கடந்த 2016 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை (14) மாலை கருங்கண்டல் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் ம.வி பாடசாலையில்,மடு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வுக்கு விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது மடு கல்வி வலயத்திற்குற்பட்ட 57 பாடசாலைகளில் கடந்த 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த 400 மாணவ மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் மற்றும் சான்றுதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இதன் போது குறித்த பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகாண ரீதியில் இடம் பெற்ற போட்டிகளில் சாதனை படைத்த பேசாலை புனித பத்திமா ம.ம.வித்தியாலைய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு..
கடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த பெரு விளையாட்டு மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாண ரீதியில் முதல் இடத்தை மன்னார் கல்வி வலயம் பெற்றுள்ளது.
குறித்த போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த மன்னார் பேசாலை புனித பத்திமா மத்திய மகா வித்தியாலைய மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) சனிக்கிழமை பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.
மன்னார் பேசாலை புனித பத்திமா மத்திய மகா வித்தியாலைய உயர்தர மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வும்,ஞாபகர்த்த நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது வடமாகாண ரீதியில் இடம் பெற்ற குறித்த போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் 3 பிரதேச செயலக பிரிவுகளுக்கு அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழுவின் இணைத்தலைவராக ஐ.தே.க. அமைப்பாளர் பஸ்மி நியமனம்-
மன்னார் மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு, பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழுவின் இணைத்தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் அமைப்பாளர் ஊடகவியலாளர் ஏ.சமீயூ முகம்மது பஸ்மி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதம் நேற்று (14) சனிக்கிழமை அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு, முசலி, மற்றும் மடு ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஓருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராகவே ஏ.சமீயூ முகம்மது பஸ்மி ஐனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களான அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் உட்பட பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிபாரிசின் பேரில் குறித்த பிரதேச அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் நியமனம் சமீயூ முகம்மது பஸ்மிக்கு ஐனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத்தலைவர்களாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், சிரேஸ்ட அமைச்சர்கள் றிஸாட் பதியூதீன் மற்றும் டி.எம்.சுவாமிநாதன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உட்பட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஏலவே ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
0000000000000000000000000000000000