கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 34 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாநிலம் முழுவதும் 265 நிவாரண முகாம்களை அரசு அமைத்துள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக தனிக் குழுவே செயல்பட்டு வருகின்ற நிலையில் நிவாரண முகாம்களில் 8,033 குடும்பங்களைச் சேர்ந்த 34,693 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக 36 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன.
இதேவேளை மழையின் காரணமாக வீதிகள் ; மோசமாக பாதிக்கப் பட்டுள்ளன எனவும் ஜூலை 19-ம் திகதிவரை பலத்த மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.