177
சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைப்ரஸின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 பேருடன் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது. தகவலறிந்து குறித்த பகுதிக்குச் சென்ற மீட்புப் படையினிர் 103 பேரை மீட்டதுடன் காணாமல் போனவர்கள் தேடும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love