துருக்கியில் அமெரிக்காவுக்காக வேவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியாரை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்த அன்ட்ரு ப்ருன்சன் (Andrew Brunson) என்ற பாதிரியார் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியிலுள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு துருக்கியில் இடம்பெற்ற அரசை கவிழ்க்கும் புரட்சியின்போது சில கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக அன்ட்ரு ப்ருன்சன் கைது செய்யப்பட்டிருந்தார்.அவர்மீது ஆட்சியை கவிழ்க்க சதி, பயங்கரவாதிகளை ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்றையதினம் நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது பாதிரியார் அன்ட்ரு ப்ருன்சனை பிணையில் விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.