குளோபல் தமிழ்ச்செய்தியாளர்…
முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டானில், கடந்த மாதம் 22 ஆம் திகதி வெடி பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட நபர்கள் உட்பட அதனுடன் தொடர்புடையவர்களை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டில் கைதான 09 பேர் மீதான வழக்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 09 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் வெடிபொருட்களை அழித்துள்ளமைக்கான சான்றுகளையும் நீதிமன்றில் சிறப்பு அதிரடிப்படையினர் முற்படுத்தியுள்ளார்கள்.
அத்துடன் இந்த வழக்கில் முதலாவது சந்கேநபரின் கைரேகைகளை எடுப்பதற்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்கள்.
இதன்போது நீதிமன்றில் வைத்து அவரின் கைரேகைகளை எடுக்குமாறு பதில் நீதிபதி சுதர்சன் உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதுவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும், நீதிபதி அறிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான் சம்பவமே, கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோர காரணம்?
இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு