Home இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்(படங்கள்)

சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்(படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(26) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இரணைமடு பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் 5 வருடங்கள் சேவையாற்றியவர்களில் முதல்கட்டமாக 100 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.  தொடர்ந்தும் ஜந்து வருடங்களை பூர்த்தி செய்த ஏனையவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் இவ்வாறு 1507 பேருக்கு கிளிநொச்சியில் நியமனங்கள் வழங்கி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனத்தினை சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிர்மல் கொஸ்வத்த  வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More