158
அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளில்லா விமான மூலம் அபுதாபி விமான நிலையத்தை தாக்கியதாக ஏமனின் ஈரானிய சார்பு ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். எனினும் விமான நியைத்திற்கு பாதிப்புகளோ, பயனிகளுக்கு பாதிப்போ இல்லை என அபுதாபி விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் விமான நிலைய உள்ளக தளத்தில் சிறிய வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
Spread the love