Home இலங்கை “கோடுகளால் பேசியவன்”

“கோடுகளால் பேசியவன்”

by admin

ஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்” நூல் அறிமுக விழா பிரித்தனியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

தமிழ் தகவல் நடுவம் (TIC) பிரித்தானியாவில் நடாத்தும் மேற்படி நூல் அறிமுக விழா, நாளை சனிக்கிழமை 28 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் ஹரோ பல்கலைக் கழகத்தில் (University of Westminster Harrow Campus, Watford Road ,Northwick Park, HA1 3TP ) பி.ப 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர் Paul Scully நூலினை அறிமுகம் செய்துவைக்கவுள்ளதுடன் பிரதம விருந்தினராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் பி.பி.சி.யின் முன்னாள் ஊடகவியலாளருமான திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் கலந்து கொள்ளவுள்ளார்.

அதேவேளை, சர்வதேச ஊகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பலரும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். தமிழ் பத்திரிகைத் துறையில் கார்ட்டூனுக்கான தனி முத்திரையை பதித்தது மட்டுமல்லாது அதில் நவீனத்துவத்தை புகுத்தி பத்திரிகைகளில் வெளிவந்த அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் அரசியல் முதல் சமூகம் வரை இன்றும் தீர்க்கதரிசனம் பேசுபனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More