ஒருவரால் தான் வாழும் கடைசி நொடி வரை தர்மம் செய்ய முடியும், சொத்து சேர்க்க முடியும். ஆனால், இன்னொருவருக்குக் கல்வியறிவையும், வாழ்க்கையையும் கற்பித்துக்கொண்டே இருக்க முடியுமா என்றால் அது வெகு சிலரால் மட்டுமே முடியும். அப்படி ஒரு பெயர் இருக்குமென்றால் “அப்துல்கலாம்” என்ற பெயர் அதில் கட்டாயம் இருக்கும்.
ராமேஸ்வரத்தில் பிறந்த இவர் ராஷ்ட்ரபதிபவன் வரை சென்று கடைக்கோடி ஊரில் இருந்து முதல் குடிமகனாக மகுடம் சூடினார். அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய அப்துல் கலாம் கடந்த வந்த பாதை இதோ…
1931 அக்டோபர் 15 ம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
1954 திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
1955 : மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங் படித்தார்.
1958 : மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.
1960: விண்வெளி ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, இந்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் இணைந்தார்.
1969: இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1980: SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்
1981: இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருதை மத்திய அரசு வழங்கியது.
1990: பத்ம விபூஷன் விருது பெற்றார்.
1992: பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
1997: இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
1998 : மே மாதம் 11-ம் தேதி மதியம் 3.45 மணிக்கு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தினார்.
2000: ராமானுஜன் விருது பெற்றார்.
2002: இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007: இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி கிங் சார்லஸ் 2 பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.
2010: பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.
2011 : ஐக்கியநாடுகள் இவரது பிறந்த நாளை உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது.
2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். யாழ் நூலகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்தார். தன்னுடைய சிறிய வயதில் யாழ் ஆசிரியரிடம் கல்வி கற்றதை நினைவு கூர்ந்தார்.
2015: மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
1 comment
உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பிள்ளைகள் விரும்பிய துறையில் அவர்களை அதி உயர் நிலைக்கு நகர்த்தி, வாழும் நாட்டில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களாக வளர பெற்றோர்கள் அதி சிறந்த வாழ்க்கை முறையை அவர்களுக்கு வடிவமைத்து கொடுக்க வேண்டும்.