குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் தகவல்களை இராணுவத்தினர் திரட்டி வருவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், உடையார் கட்டு, சுதந்திரபுரம், கைவேலி, ரெட்பானா மற்றும் மாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களின் விபரங்களை விண்ணப்ப படிவம் ஒன்றின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன் வர்த்தக நிலையங்களின் தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் 57 ஆவது படைப்பிரிவே இந்த தகவல்களை சேகரிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் 57 ஆவது படைப்பிரிவினரின் தகவல் திரட்டு – அச்சத்தில் மக்கள்….
Comments are closed.