குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பொலன்நறுவை வெலிகந்தை சேனபுர பகுதியில் அமைந்துள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பேர் நேற்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புனர்வாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்ட இரண்டு பேரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
அம்பலாங்கொடை, கஹாவ, பனாகொடை, கப்புறுகொடை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 28 மற்றும் 24 வயதான நபர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக வெலிகந்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் இருவரும் நேற்று மாலை 5.45 அளவில் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு முகாம் அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தப்பிச் சென்றவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெலிகந்தை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி காவற்துறை பரிசோதகர் பிரேமலால் தெரிவித்துள்ளார்.