குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பிரதிபலன்கள், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்ட மக்களுக்கே கிடைக்கவிருந்ததாக முன்னள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அபிவிருத்தி என்பது வறுமையில் வாடும் மக்களுக்கும், சாதாரண வாழ்க்கை கொண்டு நடத்தக் கூடிய வாழ்க்கை சூழலை கட்டியெழுப்புவதாகும்.மத்தள விமான நிலையத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்க தயாராகி வருகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பொருளாதார பிரதிபலன்கள், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் மக்களுக்கே கிடைக்கவிருந்தன.
நாட்டின் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. அதனை மீண்டும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கத்திடம் உரிய திட்டங்கள் இல்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.