ஆட்கடத்தல்களுக்கு எதிரான போராட்டத்தில், சிவில் சமூகம், சர்வதேச அமைப்புகள் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன், இணைந்து பணியாற்ற அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் றொபர்ட் ஹில்டன், ஆட்கடத்தல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள, நீதித்துறையை வலுப்படுத்தல், ஆட்கடத்தல் தொடர்பான தரவுகளை சேகரிப்பதற்கான ஒரு அமைப்பை ஸ்தாபித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட காரணிகளுக்காக அமெரிக்கா இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஆட்கடத்தல்களை முறியடிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சியை உறுதிபடுத்தும் வகையிலேயே இந்நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்த விடயத்தில் இலங்கையை தனிமைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது எனவும், ஆட்கடத்தல்களை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருவதாகவும், லங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் றொபர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.