இந்தியா பிரதான செய்திகள்

தெலங்கானாவில் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு


தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாத்தில் பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கராத்தே கற்றுக் கொண்டிருந்த 2 மாணவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையைப் போன்று இன்றும் குறித்த பாடசாலையின் ஒரு பகுதியில் மாணவர்கள் சிலர் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென அந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தினர் மீது காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.