பெண் துறவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சீனத் துறவி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த துறவி தங்கியிருக்கும் கோயிலில் இருந்து 2 துறவிகள் அரச அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அதிகரித்து வரும் மீ ரூ இயக்கத்தின் ஒரு பகுதியாக பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர் பிரபலமான மடாதிபதியான சுயேசொங் என்பவராவர். சீனாவின் பௌத்த மதக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலுள்ள இவர், இந்தப் பொறுப்பை வகிக்கும் இளைய துறவி என்பதுடன் அரசாங்காத்தின் அரசியல் ஆலோசகராகவும் இவர் இருந்து வருகிறார்
அதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம் குறித்த 2 துறவிகளும் பொய்யுரைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக புலனாய்வு குழு ஒன்றை அமைக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ள கோயில் நிர்வாகம் மடாதிபதி சுயேசொங்கை மோசமாக சித்தரிக்கும் வகையில் இந்தக் குற்றச்சாட்டு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது