Home இலங்கை கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கோப்பாயில் இருந்து கைதடி நோக்கி தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி பயணித்த போது எதிரே வந்த எரிபொருள் தாங்கியுடன் (பவுசர்) மோதி விபத்துக்கு உள்ளானதில் , தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சம்பவத்தில் நகைக்கடை உரிமையாளரான 45 வயதான ரஞ்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது 18 வயதுடைய மகளே படுகாயமைடந்துள்ளார். சம்பவம் தொடர்பில் , கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More