Home உலகம்கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் – முதலீடுகளை சவூதி அரேபியா நிறுத்தம்

கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் – முதலீடுகளை சவூதி அரேபியா நிறுத்தம்

by admin


கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்திவைப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. தனது உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலையீடுவதன் காரணமாகவே இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக கனடா தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் அண்மையில் சில பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமைக்கெதிராக குரல் எழுப்பியிருந்த கனடா அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சவூதி, தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் தூதுவரையும் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் தனது நாட்டின் உள்விவகாரத்தில் எவ்விதமான தலையீட்டினையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள சவுதி அரேபியாவின் வெளியுறத்துறை அமைச்சு கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More