Home இந்தியாமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீமுக்கு பரோல் வழங்க நீதிமன்றம் மறுப்பு

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீமுக்கு பரோல் வழங்க நீதிமன்றம் மறுப்பு

by admin


மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீம் பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் பரோலில் விட முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 46 வயதான அபு சலீமுக்கு இந்த வழக்கு தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இவர் திருமணம் முடிப்பதற்காக . 1 மாதம் பரோல் வழங்குமாறு கோரியிருந்த போதும் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எனவே இது தொடர்பாக அவர் மும்பை உயர்நீதிமன்றில் முறையிட்டிருந்த நிலையில் பரோல் வழங்க மறுத்த நீதிபதிகள் அவரது ; மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More