148
Parliament crash: A car has crashed outside parliament (Image: BBC/SKY NEWS )
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு மதில்களையும் அரண்களையும் காரொன்று இடித்துச் சென்றதில், பாதசாரிகள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (14.08.18) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கார் சாரதி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய லண்டனில் காவற்துறையிரும் அவசர வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித விடயங்களையும் அறிவிக்க முடியாதுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தீவிரவாத செயற்பாடா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தீவிரவாத செயற்பாடா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Parliament crash: A car has carried into security barriers outside the Houses of Parliament (Image: NC)
Parliament crash: A man was led away in handcuffs (Image: SKY NEWS )
Spread the love