அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கறுப்பினத்தவரான தனது முன்னாள் உதவியாளரை நாய் என அழைத்தமை அங்கு பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் முன்னாள் உதவியாளரான ஒமரோசா மனிகோ ல்ட் நியூமன் (Omarosa Manigault Newman) என்ற பெண் தானும் ஜனாதிபதி டிரம்பும் உரையாடும் தொலைபேசி உரையாடல் பதிவொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகியிருந்த நிலையில் இதுகுறித்து ட்ரம்ப் ஒமரோசாவை நாய் என குறிப்பிட்டு ருவிட்டரில் பதிவிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அழுது புலம்பும் பைத்தியக்கார கீழ்வாழ்க்கை பெண்ணுக்கு நன்மை செய்யலாம் என வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால் அது சரியாக அமையவில்லை, அந்த நாயை உடனடியாக வேலையை விட்டு நீக்கியது மிக சிறப்பான செயல் என அவர் பதிவிட்டுள்ளார்.
இதனைதயடுத்து தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் கறுப்பினத்தவரை இழிவு படுத்துவதே டிரம்பிற்கு வழக்கமாக உள்ளது எனவும் இந்த விவகாரத்தை வைத்து இனவெறிப் போரை தூண்ட ட்ரம்ப் முயற்சிக்கிறார் எனவும் ஒமரோசா தெரிவித்துள்ளார்.
மேலும் கறுப்பினத்தவருக்கு எதிரான அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் என என பலரும் ட்ரம்பிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது