எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுக்க முடியாது என உச்சநீதிமன்றில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டின் பலனை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் 12 வருடங்களுக்கு முன்னர் வழங்கியிருந்த தீர்ப்பில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்க தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்றில் நடைபெற்று வருகின்ற நிலையில் மத்திய அரசின் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் அந்த வகுப்பினரில் குறிப்பிட்ட சிலர் வசதி படைத்தவர்களாக இருந்த போதும் சாதி மற்றும் பின்தங்கிய நிலை இன்னும் அவர்களுடன் சேர்ந்தே இருக்கிறது என சுட்டிக்காட்டியதுடன் அவர்களில் வசதி படைத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.