Home இலங்கைதகுதி தராதரம் பாராது குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்…

தகுதி தராதரம் பாராது குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்…

by admin


நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தகுதி தராதரம் பாராது குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சம்பந்தமாக சட்டத்தை அமுல்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் எனவும் அவரை தவிர தகுதியான நபர்கள் எவரும் இல்லை எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More