கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யரை தற்காலிகமாக நீக்கி பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியதால் கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யரை தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி கீழ்த்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. இந்த நேரத்தில் அவர் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது ஏன் என மணிசங்கர் அய்யர் கேள்வி எழுப்பியிருந்தார். மணிசங்கர் அய்யரின் தரக்குறைவான பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தமையை அடுத்து இ அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தவு பிறப்பித்தது.
இந்நிலையில், மணிசங்கர் அய்யர் மீதான தற்காலிக நீக்கத்தை ரத்து செய்து தலைமைக்கு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்தது. இதற்கு, கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது