நிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ் கட்டிகளால் நிரம்பி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவில் மக்கள் குடியேறுவதற்கு வசதியாக ஒரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நிலவில் பல தொன் கணக்கில் ஐஸ்கட்டி குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இஸ்ரோதான் நாசாவிற்கு இதனைக் கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளது.
நிலவின் மேற்புறத்தில் இருந்து சில சென்டிமீட்டர் தூரம் ஆழம் வரை ஐஸ் கட்டிகள் நிரம்பி உள்ளது எனவும் நாசாவின் எம்3 எனப்படும் மூன் மினராலஜி மேப்பர் என்ற சாதனம் மூலம் இந்த தகவல் அறியப்பட்டுள்ளது.
நிலவின் பின்பக்கத்தில் அதிக அளவில் ஐஸ் கட்டிகள் உள்ளது எனவும் சூரிய ஒளி பல ஆயிரம் வருடமாக படாமல் இருக்கும் நிலவின் இன்னொரு பக்கத்தில்தான் அதிக அளவில் ஐஸ் கட்டிகள் உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 156 டிகிரி செல்சியஸ் இதனால்தான் அங்கே ஐஸ் படலம் உருவாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மனிதர் நிலாவில் எதிர்காலத்தில் வசிக்க முடியும் எனவும் தற்போது, நிலவில் வெப்பநிலை உயர வாய்ப்பில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ நிலாவின் வெப்பநிலையை உயர்த்தி, அங்கு இருக்கு ஐஸ் கட்டிகளை உருக வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதனால் எதிர்காலத்தில் நிலவில் வசிப்பது சாத்தியம் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.
நிலவின் முதலில் நீர் இருக்கிறது என்பதை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோதான் கண்டுபிடித்தது. தற்போது, நிலவில், ஐஸ்கட்டி இருக்கிறது என்பதையும் இஸ்ரோதான் கண்டுபிடித்துள்ளது. இஸ்ரோ பத்து ஆண்டுகளுக்கு முன் அனுப்பி செயலிழந்த சந்திராயன் 1 அனுப்பிய தகவல்களை வைத்துதான் இதை கண்டுபிடித்ததாக நாசா தெரிவித்துள்ளது.