பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பரீட்சையை திட்டமிட்டவாறு நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உப்புல் திசாநாயக்க தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட கல்வி நடவடிக்கைகள் நேற்று (27.08.18) மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த உபவேந்தர், தற்போது பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறுகின்றன. 2017/ 18ஆம் கல்வி ஆண்டிற்காக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அதற்கான பெயர் பட்டியல் இன்னமும் கையளிக்கப்படவில்லை. ஒக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ சகல பீடங்களுக்கும் புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் உபவேந்தர் குறிப்பிட்டு உள்ளார்.