வாழ்நாள் தடையை எதிர்த்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தொடர்ந்துள்ள வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ரீசாந்த் ஐ.பி.எல். போட்டியின்போது ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த்துக்கு பி.சி.சி.ஐ. ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆயுட்கால தடை விதித்திருந்தது
பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஸ்ரீPசாந்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அவரை நீதிமன்றம் அவரை செய்த போதும் பிசிசிஐ அவர்; மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை. இதனையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்த நிலையில் உயர்நீதிமன்றம் வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்ட போதும் பிசிசிஐ மேல்முறையீடு செய்தபோது தனி நீதிபதி உத்தரவு செல்லாது என அறிவித்தது.
இந்நிலையில் பிசிசிஐ வாழ்நாள் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இந்த வழங்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த் தனது மனுவில், தான் கடந்த ஐந்தாண்டுகளாக தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறேன் எனவும் இதுவே போதுமான தண்டனையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது