Home இலங்கைஞானசார தேரரின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது….

ஞானசார தேரரின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது….

by admin

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர், தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு இன்று 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.  அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றது. அதன்போது, நீதிமன்றத்தை அவமதித்தமை நிரூபிக்கப்பட்ட நிலையில் ஞானசார தேரருக்கு,    கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில்,   மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்மானித்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதாக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More