Home இலங்கைகிளிநொச்சியில் படுகொலை செய்யபட்ட பெண்ணுக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யபட்ட பெண்ணுக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் படுகொலை செய்யபட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நீதி கோரியும் கொலையாளிகளை கைது செய்ய கோரியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா , வடமாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன் , ஆ. புவனேஸ்வரன் , த.குருகுலராஜா , சு. பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பின்னணி.

முல்லைத்தீவு முறிகண்டி வசந்தநகரை சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணியான கருப்பையா நித்தியகலா (வயது 32) எனும் குடும்ப பெண் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து கடந்த 29ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

   

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More