பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மானிட வள ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (31.08.2018) கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக 113 தேசிய பாடசாலைகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மீதமாகவுள்ள 241 பாடசாலைகளுக்கும் குறித்த பாடசாலைகள் செயற்திட்ட அறிக்கையை பெற்றுக் கொடுத்த பின்பு அவற்றுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. 399 மாணவர்களுக்கு குறைவான தொகையை கொண்ட பாடசாலைகளுக்கு 20000.00 ரூபாவும் 400 முதல் 2999 மாணவர்களை கொண்ட பாடசாலைக்கு 300000.00 ரூபாவும் 3000 மாணவர்களுக்கு அதிக தொகையை கொண்ட பாடசாலைகளுக்கு 500000.00 ரூபாவும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.