பிரதான செய்திகள் விளையாட்டு

அலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரரான அலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதாகும் அலஸ்டைர் குக் கடந்த 2006-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்தியாவிற்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் அறிமுகமாகியிருந்தார்.

டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குக் இங்கிலாந்து அணியின் தலைவராகவும் பொறுப்பேற்றிந்தாh. இவர் இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்களுடன் 12, 254 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக இவரது ஆட்டம் பிரகாசிக்காத காரணத்தினால் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகின்ற இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை எடுத்தோர் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள குக் அதிக ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து வீரர் என்ற பெருமையோடு விடைபெறுகிறார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.