சினிமா பிரதான செய்திகள்

இந்தியன் 2 திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்


இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன்படம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக இயக்குனர் சங்கருடன் ஒளிப்திவாளர் ரவிவர்மனும் படப்படிப்பு தளங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் நடிகர் கமல ஹாசன் இரட்டை வேடங்களில்  நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார் கமல். இதனையடுத்து அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் படத்தில் தாத்தா கதாபாத்திரம்தான் படத்தின் வேறாக இருந்தது. முதல் பாகத்தின் முடிவில் இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்று முதல் பாகத்தை முடித்து இருந்தனர்.
இரண்டாம் பாகத்தில் கமல் இந்தியா திரும்புவது போலவும், இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதான தோற்றத்தில் காட்ட ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக வெளிநாட்டு ஒப்பனைக் கலைஞர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர். இளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது, அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவதாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.