குளோபல் தமிழ் செய்தியாளர்…
காணொளி – Kumanan Kana –
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை – தண்ணிமுறிப்பு பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்காக சென்ற பௌத்த பிக்குகளை அப் பகுதி இளைஞர்கள் வெளியேற்றியுள்ளனர்.
குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதை தடுக்கும் வகையில் பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புறப்பட்டனர். இது குறித்து செய்திகளை அறிந்த பிக்குகள் குழு அப் பகுதியை விட்டு வெயளியேறி சென்று கொண்டிருந்த போது இளைஞர்களால் வழிமறிக்கப்பட்டனர்.
தண்ணிமுறிப்பு பகுதியில் வைத்து குறித்த பிக்குகள் வழிமறிக்கப்பட்டு, இத்தகைய செயற்பாடுகளை செய்ய வேண்டாம் என இளைஞர்களால் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப் பகுதியில் முறுகல் நிலை தோன்றியது. அத்துடன் இப் பகுதிக்கு வடமாகாண அமைச்சர் சிவநேசன், உறுப்பினர் ரவிகரன் பிரதேச சபை தவிசாளர் தவராசா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.