ஜம்மு காஷ்மீரில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும் இதனை தொடர்ந்து காவல்துறையினரும் பதில் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதன் போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட தீவிரவாதியின் அடையாளம் மற்றும் எந்த குழுவை சேர்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இந்தத் தாக்குதலின் போது காவல்துறையினர் ஒருவரும் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது