முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளது எனினும் மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கருக் கும் இரா. சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில், இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளதெனவும் எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
காணாமற்போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்ததுடன், அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பு அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கையானது நியாயமானது மட்டுமன்றி, அது சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
2 comments
ஒரு சாதாரண புத்திசாலி தமிழனாக இருந்தால் சாம்பந்தனைவிட சிறப்பாக பேசி ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக செய்யக்கூடிய பணிகளை கேட்டு ஒரு வாய்மொழி உடன்பாட்டை பெற்று இருப்பார்.
ஒரு சாதாரண புத்திசாலி தமிழனாக இருந்தால் சாம்பந்தனைவிட சிறப்பாக பேசி ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக செய்யக்கூடிய பணிகளை கேட்டு ஒரு வாய்மொழி உடன்பாட்டை பெற்று இருப்பார்.