அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கானஇறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஒசாகா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா வெற்றி பெற்றார். இதன் மூலம் ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் எனும் பெருமை பெற்றுள்ளார். இந்த போட்டியின் போது செரீனாவின் பயிற்சியாளர் கைகளால் அடிக்கடி சைகை செய்தமையை விதிமீறல் என நடுவர் கண்டித்தமையை அடுத்து செரீனாவுக்கும் நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போட்டி சர்ச்சையுடன் முடிவடைந்துள்ளது.
மேலும் செரீனா அவரது டென்னிஸ் மட்டையை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தியதனால் அது விதிமீறல் எனத் தெரிவிக்கப்பட்டு அவரது புள்ளிகளும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது