மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்ய வலியுறுத்தியும், UAPA சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் கூட்டம் அன்று சென்னையின் தி.நகர் முத்துரங்கன் சாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 9ஆம் திகதி நோர்வேயில் இருந்து பெங்களுர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய திருமுருகன் காந்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆகின்றது.
இவரது விடுதலையை வலியுறுத்தி இடம்பெற்ற கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் உணர்வாளர்களும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய எழுச்சியுடன் பங்கேற்றனர்.
இதன்போது, ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுடன் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.