Home இலங்கைஇலங்கையைின் ஆட்சியை 2020ல் பிடிக்க முன் இந்தியாவை சுற்றி வளைத்த மகிந்த…

இலங்கையைின் ஆட்சியை 2020ல் பிடிக்க முன் இந்தியாவை சுற்றி வளைத்த மகிந்த…

by admin

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாஜக சிரேஸ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பித்த விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் மகிந்த டெல்லி சென்றிருந்தார்.

இந்தநிலையில் நேற்றையதினம் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய மகிந்த, பல்வேறு தலைவர்களை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மன்மோகன் சிங், ராகுல் காந்தி மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More