Home இலங்கைமடுத் திருத்தல பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் :

மடுத் திருத்தல பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மடுத் திருத்தல பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை காலை மடு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. மடுத் திருத்தல பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த நிலையில்
ஆரம்ப கட்ட கூட்டம் கடந்த மாதம் 31 ஆம் திகதி ( 31.08.2018 ) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதன் தொடர்ச்சியான பல விபரங்களை உள்ளடக்கிய கூட்டமே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மன்னார் மாவட்ட செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர் உட்பட பல திணைக்களக்களைத் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன் போது மடு திருத்தலத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More