165
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் காவற்துறை மா அதிபருமான நாலக டி சில்வா தெரிவித்திருப்பதாக கூறப்படும் கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பித்திருப்பதை காண முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், பாதுகாப்பு தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பித்து உண்மைய நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில் கோத்தபாய ராஜபக்ஸவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Spread the love