191
இன்று துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் 26 ஓட்ட வித்தியாசத்தில் ஹொங் கொங் அணியை இந்தியா வென்றுள்ளது. நாணயச்சுழற்சியில்வென்ற ஹொங் கொங் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி . நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 286 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹொங்கொங் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களளை இழந்து 259 ஓட்டகளை பெற்ற நிலையில் இந்திய அணி 26 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Spread the love