176
ஏமனில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுவதாக சேவ் த சில்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் அந்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொத்தம் 52 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
Spread the love