குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மன்னார் மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான இறுவட்டு வெளியீட்டு விழா –
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா துறையினை அிவிருத்தி செய்யும் நோக்கில் மன்னார் மாவட்ட சுற்றுலா தளங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பாடல் மற்றும் மன்னார் மாவட்டத்தின் கைத்தொழில் உற்பத்திகளை மையப்படுத்திய ஆவணப்படம் ஒன்றும் மாவட்ட ரீதியில் வெளியீடு செய்யும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (18.09.18) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
‘MIC turisam’ எனும் என்ன கருவில் மன்னார் மாவட்டதில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சுற்றுலா சார்ந்த இடங்களை அடையாளபடுத்தும் முகமாகவும் சுற்றுலா பயணிகளின் வரவினை அதிகரிக்கும் முகமாக கனடா நாட்டின் நிதி உதவியுடன் குறிப்பிட்ட பாடல் மற்றும் ஆவணப்படம் தயாரிக்கபட்ட நிலையில் நேற்று வைபவ ரீதியாக இரு விடயங்களையும் உள்ளடக்கிய இறுவட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் சுற்றுலா படகு ஓட்டுனர்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர்கள் ,பிரதம கனக்காலாளர் மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகள் உட்பட WUSC நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது .
நானாட்டான் பிரதேசத்தில் கழிவு நீர் அகற்றல் செயற்பாடுகளுக்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் தி.பரஞ்சோதி தெரிவிப்பு-
நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாலங்களில் கழிவு நீர் அகற்றும் குழாய்கள் பழுதடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ள நிலையில் கழிவு நீர் அகற்றல் செயற்பாடுகளுக்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மழை காலங்களில் கழிவு நீரானது வெளியேற்றப்படாமல் கிராமங்களுக்குள் தேங்கி நின்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கழிவு நீர் அகற்றல் செயற்பாடுகளுக்காக நானாட்டான் பிரதேச சபையின் 7 ஆவது அமர்வின் போது 10 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கி தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
கழிவு நீர் குழாய்கள் பழுதடைந்து திருத்தம் செய்ய இனங்காணப்பட்ட கிராமங்களான வங்காலை, நறுவிலிக்குளம், மடுக்கரை, ஒலிமடு, செட்டியார் கட்டையடம்பன், போன்ற கிராமங்கள் அடையாளம் கானப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தலைமன்னாரில் பியர் பகுதியில் வீடொன்று எரிந்து முற்றாக சேதம்-
தலைமன்னார் பியர் கேம்பலஹவுஸ் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (18.09.18) இரவு 8 மணியளவில் வீடொன்று எரிந்து முற்றாக சேதமடைந்ததுள்ளது.
குறித்த சம்பவத்தினால் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ எவ்வாறு ஏற்பட்டது என தெரியவரவில்லை.தகவலறிந்த மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த வீட்டின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கையினை உடன் செய்து கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதே வேளை மன்னார் பிரதேச உறுப்பினர்களான எம்.நயீம், புனிதா மற்றும் டிப்னா ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
தீயில் அகப்பட்டு முற்றாக சேதமாகியுள்ள சொத்தின் விபரம் சுமார் ரூபாய் 25 இலட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதனை ஈடு செய்யும் பொருட்டு தன்னால் முடியுமான நடவடிக்கையினை அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் ஆலோசனை செய்து வெகு விரைவில் பெற்றுத்தருவதாகவும் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்துள்ளார்.
வங்காலை கடற்கரையில் இடம் பெற்ற கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்.
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோரக் கடல் வளங்களைப் பேணும் வாரமும், கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மன்னாரில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்காலை கடற்கரையில் வங்காலை மீனவர்கள்,கடற்படை அதிகாரிகள் மறும் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை , பிரதேச சபை, மேற்கு கிராம அலுவலகர், ஆகியோர் இணைந்து இன்று புதன் கிழமை (19) காலை வங்காலை கடற்கரையில் கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.