255
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இன்று காலை பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கடகல பைனான்ஸ் (Senkadagala finance) என்ற இந்த நிதிநிறுவனத்தில் சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர். இதன்போதே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்குப் காவற்துறையினர் விரைந்துள்ளனர்.
Spread the love