ஊழல் வழக்கு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள் மற்றும் அவரது மருமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியமை தொடர்பான ஊழல் வழக்கில் நெவாஸ் ஷரிப்புககு 11 ஆண்டுகளும அவரது மகள் மரியம் நவாசுக்கு 8 ஆண்டுகளும் மருமகன் சப்தருக்கு ஒருவருடமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த தண்டனையை எதிர்த்து குறித்த மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் இன்று தீர்ப்பளித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ததுடன் மூவரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது