155
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிட பாட்னா உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்ததனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது
இதன்போதே பாட்னா உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கிய நீதிபதிகள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர்.
Spread the love